Holy Bible

your daily dose of truth

  • FBFB
  • Home
  • World News
    • Asia
    • Europe
    • International
    • Middle East
    • North America
  • Read Bible
    • English Bible
    • Tamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]
  • Entertainment
    • Movies
    • Music
    • Videos
  • Articles
  • History
    • Old Testament
  • Videos
    • Latest Stories

    • House Churches – R Stanley

    • Ancient Seal found PROVES Biblical truth

Search

Enter the Bible passage (e.g., John 3:16)

    Luke - Tamil Bible

    Luke 1

    1. மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே> நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை>

    2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்>

    3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று>

    4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

    5. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில்> அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி> அவள் பேர் எலிசபெத்து.

    6. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து> தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

    7. எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால்> அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.

    8. அப்படியிருக்க> அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்>

    9. ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.

    10. தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

    11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.

    12. சகரியா அவனைக்கண்டு கலங்கி> பயமடைந்தான்.

    13. தூதன் அவனை நோக்கி: சகரியாவே> பயப்படாதே> உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்> அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

    14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்> அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

    15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான்> திராட்சரசமும் மதுவும் குடியான்> தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

    16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

    17. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும்> கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி> உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக> அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

    18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்> என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.

    19. தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும்> உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;

    20. இதோ> தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.

    21. ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து> அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

    22. அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.

    23. அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.

    24. அந்நாட்களுக்குப்பின்பு> அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து>

    25. எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி> ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.

    26. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன்> கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்>

    27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.

    28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே> வாழ்க> கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்> ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

    29. அவளோ அவனைக் கண்டு> அவன் வார்த்தையினால் கலங்கி> இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

    30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே> பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

    31. இதோ> நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்> அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

    32. அவர் பெரியவராயிருப்பார்> உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

    33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

    34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

    35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

    36. இதோ> உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

    37. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.

    38. அதற்கு மரியாள்: இதோ> நான் ஆண்டவருக்கு அடிமை> உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

    39. அந்நாட்களில் மரியாள் எழுந்து> மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்>

    40. சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து> எலிசபெத்தை வாழ்த்தினாள்.

    41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது> அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு>

    42. உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்> உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

    43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.

    44. இதோ> நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே> என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.

    45. விசுவாசித்தவளே பாக்கியவதி> கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.

    46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.

    47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

    48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ> இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

    49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

    50. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

    51. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.

    52. பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி> தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

    53. பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி> ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

    54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே> ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து>

    55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.

    56. மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து> தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.

    57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.

    58. கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு> அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.

    59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து> அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.

    60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல> அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.

    61. அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி>

    62. அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

    63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி> இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

    64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு> அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு> தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.

    65. அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

    66. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு> இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

    67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு> தீர்க்கதரிசனமாக:

    68. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

    69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;

    70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:

    71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு> உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று>

    72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;

    73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே>

    74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு> நம்முடைய சத்துருக்களினின்றும்> நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும்> நம்மை இரட்சிக்கும் படிக்கு>

    75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

    76. நீயோ பாலகனே> உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்>

    77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்> அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.

    78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்>

    79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்> அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

    80. அந்தப் பிள்ளை வளர்ந்து> ஆவியிலே பலங்கொண்டு> இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

    • Related Readings

    • Related Readings

    • Latest News & Articles

      House Churches - R Stanley

      House Churches - R Stanley

      March 21st, 2020

      The cancellation of the Sunday Services and the other congregational gatherings of the Christian Chu[...]
      Ancient Seal found PROVES Biblical truth

      Ancient Seal found PROVES Biblical truth

      April 29th, 2019

      Archaeologists have made a stunning discovery in the land of Israel which proves that the story[...]
      Justin Bieber says “God is good in the midst of the darkness”

      Justin Bieber says “God is good in the midst of the darkness”

      June 16th, 2017

      Its been two weeks since a suicide bomber killed 22 dead and around 50 people injured during the Ari[...]
      Soccer Star Refuses to Wear Rainbow Jersey Supporting LGBT

      Soccer Star Refuses to Wear Rainbow Jersey Supporting LGBT

      June 14th, 2017

      Christian Athlete Jaelene Hinkle has skipped womens team trip sighting 'personal reasons'. Though sh[...]
      Scientists now Believe Red Sea Could have parted for Moses

      Scientists now Believe Red Sea Could have parted for Moses

      February 24th, 2017

      Moses and the Red Sea is one of the most popular incidents from the Bible. This incident is largely [...]
    • Verse for the Day

      "Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you." - Matthew 7:7
    • Recent Comments

      • Carylon Ball on How to Get a Gideons Pocket Bible
      • Carylon Ball on How to Get a Gideons Pocket Bible
      • Sue on Adam
      • Jim Kain on Will My Pet Go to Heaven?
      • DEBRA LLOYD on Israel to provide security for Rio Olympics and Paralympics
    • Categories

      • Articles
      • Asia
      • China
      • Europe
      • FAQs
      • International
      • Middle East
      • Movies
      • Music
      • North America
      • Old Testament
      • Reviews
      • Tamil News
      • USA
      • Videos
      • World News
    • Home
    • World News
      • Asia
      • Europe
      • International
      • Middle East
      • North America
    • Read Bible
      • English Bible
      • Tamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]
    • Entertainment
      • Movies
      • Music
      • Videos
    • Articles
    • History
      • Old Testament
    • Videos
    • FBFB

    © Copyright 2019 Holy Bible.