House Churches - R Stanley
March 21st, 2020
1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும்> அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும்> தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்>
2. ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4. இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்>
5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்> பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
6. அவர் சகல ஜாதிகளையும்> அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்>
7. தமது நாமத்தினிமித்தம் விசுவாசித்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு> எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
8. உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே> முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
9. நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
10. நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்>
11. உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்> உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே>
12. எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
13. சகோதரரே> புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு> உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன்> ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
14. கிரேக்கருக்கும்> மற்ற அந்நியர்களுக்கும்> ஞானிகளுக்கும்> மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
15. ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.
16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி> விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய்> தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20. எப்படியென்றால்> காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள்> உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே> உலகமுண்டானதுமுதற்கொண்டு> தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
21. அவர்கள் தேவனை அறிந்தும்> அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும்> ஸ்தோத்திரியாமலுமிருந்து> தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி>
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக> தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி> சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள்> அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்> ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி> ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து> தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்> தகாதவைகளைச் செய்யும்படி> தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும்> வேசித்தனத்தினாலும்> துரோகத்திலும்> பொருளாசையினாலும்> குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும்> கொலையினாலும்> வாக்குவாதத்தினாலும்> வஞ்சகத்தினாலும்> வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்>
30. புறங்கூறுகிறவர்களுமாய்> அவதூறுபண்ணுகிறவர்களுமாய்> தேவபகைஞருமாய்> துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய்> அகந்தையுள்ளவர்களுமாய்> வீம்புக்காரருமாய்> பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய்> பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்>
31. உணர்வில்லாதவர்களுமாய்> உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய்> சுபாவஅன்பில்லாதவர்களுமாய்> இணங்காதவர்களுமாய்> இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும்> அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல்> அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
March 21st, 2020
April 29th, 2019
June 16th, 2017
June 14th, 2017
February 24th, 2017