நடிகர் ராமராஜன் இயேசுவை தெரிந்துகொண்ட கதை

நடிகர் ராமராஜன் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சி:

Ramarajan Actor - Tamilநான் பல நாட்களாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் வர முடியவில்லை. நான் இங்கே இன்று வந்து நிற்கிறேன் என்றால் அது இயேசுவின் மிகபெரிய கிருபை.

உலகம் முழுவதும் இருக்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே… நான் பல முறை தொலைகாட்சியிலும், மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.. MBBS போன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை இயேசுவின் கிருபையால் குணப்படுத்துவதை பார்த்து வியந்திருக்கிறேன்.. என்னடா… கரகாட்டகாரன் படத்தில் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடிகொண்டிருந்தவன் இங்கே கோவையில் சாட்சி சொல்லுகிறார் என்று.. வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம்.

நான் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தேன். அங்கே உதவி டைரக்டர், டைரக்டர் பின் நடிகர் என்று வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்தேன். அனைத்து படங்களும் மிகபெரிய வெற்றியை கண்டது. எல்லோருக்கும் ராமராஜன் யார் என்று தெரிந்தது. பின்பு அரசியலில் அறிமுகமாகி மாண்புமிகு அம்மா புரட்சிதலைவி ஜெயலலிதா மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன்.. இந்த பாதையில் வந்து கொண்டு இருந்த பொது எல்லோருக்கும் வரும் சோதனை போல எனக்கும் சோதனை வர ஆரம்பித்தது.

2010 ம் ஆண்டு ஓர் இடத்திற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மிகப்பெரிய கார் விபத்தில் மாட்டி கொண்டேன். அந்த கார் விபத்தில் என் நண்பர் அந்த இடத்திலேயே மரித்து விட்டார். என்னுடன் இருந்த இன்னொரு நண்பர் பால்தங்கராஜன் என்பவரும் இருந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களாக சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாக இருந்தேன்.

அங்கு வந்த பலரும் என்னை பார்த்து இவர் பிழைப்பாரா, பேசுவாரா, பழைய நினைவுகள் வருமா என்று வருத்தப்பட்டனர். பால்தங்கராஜ் இயேசுவை வழிபட்டு கொண்டிருப்பவர். அவர் என்னை மருத்தவமனையில் முழுவதுமாக கவனித்து கொண்டார். சுயநினைவு திரும்பினவுடன் நான் புலம்ப ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..

இதை கவனித்த தங்கராஜ் அவர்கள் “தைரியமாக இருங்கள், ஒன்றும் ஆகாது. நான் ஓர் போதகரை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு ஓர் போதகரை அழைத்து வந்தார். அந்த போதகர் என் தலையில் கை வைத்து ஜெபம் செய்தார். எனக்கு ஏசுவே நேராக வந்து என் தலையில் கைவைத்தது போல உணர்ந்தேன்.

நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன். பல இடங்களுக்கு போகிறேன் என்றால் அதற்கு இயேசு கிறிஸ்துவே காரணம். முன்பெல்லாம் ஓர் பிரச்சினை என்றால் பல கோவில்களுக்கு சென்று வருவோம். ஆனால் மனதார இயேசுவை நினைத்தால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நமக்கு பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர் மாத்திரமே…

கர்த்தரை நம்பினோர் கைவிடப்படமாட்டார். பிரட்சினைகள் வரும்போது பல யோசனைகள் நம் மனதில் தோன்றி சஞ்சலப்படும். அந்நேரத்தில் ஆலயத்திற்குள் சென்று இயேசுவை உண்மையாய் வணங்குவோம் என்றால் தேவன் பதில் கொடுப்பார். நான் கதை சொல்லவில்லை. என் கண்முன் பார்த்த சம்பவங்கள் அது.

நான் நடிகர் செந்திலையும் அழைத்தேன். அவரும் பல நிலைகளில் கஷ்டப்பட்டு பல இடங்களுக்கு சென்று பிறகு இயேசுவை வணங்க ஆரம்பித்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று சாட்சி சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஆனால் அவர் வேறு வேலைகள் இருப்பதால் வர முடியவில்லை.

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக கர்த்தர் உனக்கு துணை நிர்ப்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. இந்த சாட்சியை பகிர்ந்து கொள்ள செய்த ஏசுவிற்கு ஆல்லேலூயா ஸ்தோத்திரம் என்று கூறி முடிக்கிறேன்…

ஆமென்…